தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
என் கணணி வின் 10 ஓன் பண்ணும் போது reboot and select proper boot device or insert boot media in selected bootdevice and pres a key என வருகுது சில நேரங்களில் இந்த பிரச்சனை வந்தபோது கணணியை நிப்பாட்டி நிப்பாட்டி போட்ட போது சரிவந்த்தது ஆனால் இப்போது வரவில்லை இதற்கு என்ன செய்யலாம்
in Windows by புதியவர் (180 points)

Please log in or register to answer this question.

2 Answers

+1 vote
ஒரு கணினியில் தவறுகள் வருவதற்கு பல காரணங்கள் காரணிகளாக இருக்க முடியும். பொதுவாக நீங்கள் கூறிய தவறு ஏற்படக் கூடிய காரணிகள் இங்கே தரப்படுகின்றன. என்ன காரணி என்பதை ஒவ்வொன்றாக சரி பார்க்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும்.

1.BIOS- கணினி boot செய்யத் தொடங்கும் போது CD/DVD/Floppy முதன்மை boot ஆக இருந்தால் இப்படி ஏற்பட வாய்ப்புண்டு. BIOS சென்று Boot order ஐ மாற்றி hard Disk ஐ முதன்மை boot ஆக மாற்ற வேண்டும். சாதாரணமாக வந்தட்டில் இருந்தே boot செய்யப்படுகிறது. இது மிக சுலபமாக செய்யக் கூடிய ஒன்றாகும்.
2.CMOS battery வலுவிழந்து இருந்தாலும் இப்படி வர வாய்ப்புண்டு.CMOS battery  மாற்ற வேண்டும்.
3.வந்தட்டு format செய்யப்பட்டு வின்.10 இன்ஸ்டால் செய்யப்பட்டு இருந்தால்,சில boot files நீக்கப்படாது இருந்தால் வர வாய்ப்புண்டு. Disk Management சென்று வின்.10 இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் வந்தட்டு/வந்தட்டின் பகுதி (partition செய்யப்பட்டிருந்தால்) Aktive ஆக இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும்.
4.கணினியை திறந்திருந்தால் இணைப்பு வயர்களை சரி பார்க்கவும்.
5. பழைய கணினியாக இருந்தால் விண்டோஸ் 10 ற்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம்.
6.Dual boot இல் இயங்குதளங்களை ஏற்படுத்தி அதில் ஒன்றை சரியாக நீக்காமல் விட்டால் ஏற்படலாம். நீங்கள் கூறியதை வைத்துப் பார்த்தால் இப்படி ஏற்பட வாய்ப்பு குறைவாகும். CMU/BIOS ஐ கூறலாம். BIOS அப்டேட் செய்வது வழியாகும்.
by வல்லுநர் (9.7k points)
நன்றி அண்ணா இக்கணணி வின் 7 ல் இருந்து வின் 10 கு அப்டேட் செய்யப்பட்டது நீங்கள் கூறிய வழிகளை செய்து பார்கிறேன் .
0 votes
விண்டோஸ் 7 இல் இருந்து வின் 10 ற்கு அப்கிரேட் செய்திருந்தால்,இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம். வின் 7  இல் இருந்து வின் 10 ற்கு அப்கிரேட் செய்யும் கணினியில் இப்படி வர வாய்ப்புண்டு.வின் 8 இல் இருந்து அப்கிரேட் செய்யும் போது இப்படி ஏற்பட வாய்ப்பு குறைவு. காரணம் 8/10 ஒரே மாதிரியான boot அமைப்பாகும்.

safemode சென்று startup repair செய்யலாம்.அல்லது
Shift key + Power button – Restart செய்யவும். பின் Troubleshoot - Advanced options -Startup settings - Restart  -இப்போது 5 அல்லது F5 ஐ அழுத்தி safe mode செல்லவும்.startup repair செய்யவும்.

திகதி நேரம் தவறாகக் கூட இருக்கலாம்.
வின் 10 ற்கு அப்கிரேட் செய்யப்பட்ட கணினியில் KB3135173 என்ற அப்டேட் சில சமயம் சிலவற்றை மாற்றி விடுவதால் இப்படி ஏற்பட்டிருக்கலாம்.
சரியாகா விட்டால் மைக்ரோசொப்ட் தளத்தில் இருந்து Windows 10 installation media என்ற கோப்பை இலவசமாக பதிவிறக்கி சரி செய்யலாம்.
by வல்லுநர் (9.7k points)
edited by

Related questions

0 votes
0 answers
asked Dec 25, 2015 in Windows by புதியவர் (120 points)
0 votes
3 answers
asked Feb 1, 2012 in Windows by வல்லுநர் (3.1k points)
0 votes
1 answer
...