தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
+1 vote
எனது கணினியில் வேறு ஓஎஸ் நிறுவவேண்டும்  மற்றும் கணினியில் உள்ள அனைத்து
மென்பொருட்களையும் மற்ற வேண்டும் . இவை அனைத்தும் எனது அண்டிவைராஸ்
கி மாற்றாமல் செய்ய வேண்டும். நன் எனது கணினியில் போர்மட் செய்து புது  ஓஎஸ் மற்றும் மென்பொருட்களையும்  மாற்றினால் வேறு அண்டிவைராஸ் வாங்க வேண்டுமா?.
எனது அண்டிவைராஸ் இன்னும் முடியவில்லை. எனது கணினியில் அடிக்கடி ப்ளூ ஸ்க்ரீன் வருகிறது. என்ன செய்ய வேண்டும். தமிழில் பதில் அனுப்பவும். நன்றி.
in Windows by ஆர்வலர் (400 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
அண்டிவைரஸ் விசயத்தில் பொதுவாக அக்டிவேசன் கீ இருந்தால் திரும்பப் பயன்படுத்த முடியும்.

ஆனால் அண்டிவைரஸ் போன்ற மென்பொருட்களில் எல்லாவற்றிலும் அப்படியல்ல. மூன்று கணினியில் பயன்படுத்தலாம் என்றால் மூன்று முறை-3 user license-  திரும்ப அதே கீயை வைத்து இன்ஸ்டால் செய்யலாம். அதன் பின் expire ஆகி விடும். இந்த முறை ஒவ்வொரு அண்டிவைரஸ்  ற்கும் வேறாக இருக்கும் என்பதால்,எந்த அண்டிவைரசோ அந்த தளத்தில் help/contact சென்று தெரிந்து கொள்ளலாம்.

சில மென்பொருளில் இந்த முறை இல்லாமல் திரும்ப அண்டிவைரசை இன்ஸ்டால் செய்து பழைய அக்டிவேசன் கீயை கொடுத்து அக்டிவேட் செய்யலாம்.பழைய கீயுடன் பாவிக்க முடியும் என்பதால் வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. எந்த அண்டிவைரஸ் என்று குறிப்பிடாததால் மேலதிக விளக்கம் கொடுக்க முடியவில்லை.

போர்மட் செய்யு முன்னர் ஒரு பார்டிசன் ஒன்றை உருவாக்கி, எல்லா மென்பொருட்களையும் அந்தப் பகுதிக்கு மாற்றி விட்டால் எதையும் இழக்காமல் முதன்மை பர்டிசனை-C- மட்டும் போர்மட் செய்து கொள்ளலாம். இது சுலபமான வழி. SymMover ,Easeus போன்றவை இதற்குப் பயன்படலாம். எனினும் uninstall/install சிறந்த வழி.

பொதுவாக நீலத்திரைக்குக் காரணம் வன்பொருளாகும். வன்பொருளில் ஏற்பட்ட மாற்றம் Device Drivers- updates -காரணமாக ஏற்படலாம். கடைசியாக இணைக்கப்பட்ட வன்பொருள்/மென்பொருளை நீக்கி அல்லது கணினியை வேறொரு திகதிக்கு System Restore செய்யலாம்.கடைசியாக இணைக்கப்பட்ட updates களையும் நீக்கிப் பார்க்கலாம். இதை save mode இல் வைத்து செய்ய வேண்டும்.வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்றால் போர்மட் செய்ய வேண்டியதில்லை.

எனது கருத்து - இலவச அண்டிவைரஸ் ஒரு கணினிக்குப் போதுமானதாகும். கூடவே malwarebytes anti malaware, Malwaraebytes Anti-Exploit இணைத்துக் கொண்டாலே போதுமானதாகும். விரும்பினால் Trackers ஐயும் block செய்து விட்டால் சிறந்த பாதுகாப்பு முறையாகும்.
by வல்லுநர் (9.7k points)

Related questions

0 votes
1 answer
asked Jan 26, 2013 in Windows by இளையோர் (280 points)
0 votes
0 answers
asked Jan 18, 2013 in Windows by இளையோர் (280 points)
0 votes
0 answers
0 votes
0 answers
asked Dec 14, 2014 in Windows by புதியவர் (120 points)
...